Wednesday, December 21, 2011

சர்க்கரை நோயா!!

மாத்திரை  இல்லாமல் நோயின் பிடியில் இருந்து எளிதில் விடுபட இதோ ஒரு எளிய மூலிகை.தினமும் ஒரு   சிறுகுறிஞ்சான்  இலை,இனி சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டில்
மதுமேகம் என்னும் நீரிழிவு (சர்க்கரை நோய்)  தோன்றும்  வழி அகத்தியரால்  பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது.
 “கோதையர் கலவி போதை
கொழுத்தமீ னிறைச்சி போதைப்
பாதுவாய் நெய்யும் பாலும்
பரிவுடணுன்பீ ராகில்
சோதபாண் டுருவ மிக்க
சுக்கில பிரமே கந்தான்
ஒதுநீ ரிழிவு சேர
உண்டென வறிந்து கொள்ளே”
அதாவது பலருடன் அதிக அளவில் உடலுறவில் ஈடுபடுதல் / மீன் இறைச்சி போன்ற மாமிச உணவுகளை மிக அதிகமாகப் புசித்தல், நெய், பால் போன்ற உணவு வகைகளை அதிகமாகப் புசித்தலாலும் இந்நோய் தோன்றும் என அகத்தியர் தெரிவிக்கிறார். அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு என்பது முதுமொழி அதற்கேற்ப உடல் உறவு, மற்றும் உணவு முறைகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈடுபடும் போது மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றுகிறது என்று குறிப்பிடபட்டுள்ளது.
ஆனால் இந்த காலத்தில் நீரிழிவு  நோய் வருவதற்கு மேற்குறிய காரணங்கள் எதுவும் தேவை இல்லை. உடல் உழைப்பு குறைவு,அதிக கலோரி உணவு,அதிக கவலை ,பரம்பரை வழி ,மாறுபட்ட வாழ்க்கை முறை போன்ற மிக எளிய  நடைமுறை காரணிகளே  நம்மை இந்த நோயின் பிடியில் ஆழ்த்த போதுமானதாக  இருக்கிறது.
 நமது உடலில் ஏழு உடல் தாதுக்கள் உண்டு. அவை சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / அதாவது நாம் உண்ணும் உணவானது செரித்தபின் “சாரம்” எனப்படும். இது குடலுறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு “செந்நீர்” ஆகிறது. பின் இது “ஊன்” எனப்படும் மாமிசமாக மாறும். மேலும் உறிஞ்சப்பட்ட சத்துகள் “கொழுப்பாக” உடலில் சேர்த்து வைக்கப்படுகிறது. இதிலிருந்து என்பு, மூளை மற்றும் சுக்கிலம் சுரோணிதம் / எனப்படும் ஆண் மற்றும் பெண்ணின் இனப் பெருக்கத்திற்கான சக்தியாக மாறும்.
 இந்த மாறுதல்கள் நம் அனைவருக்கும் முன்னோக்கி நடைபெறுகிறது. ஆனால் நீரிழிவு உடையவர்களுக்கு இது ஒன்றன்பின் ஒன்றாகக் குறைவுபட்டு உடல் எடை குறைந்து உடல் நலிந்து சீர்கெடுகிறது.இது அளவில் மிகும்போது கண் மற்றும் சிறுநீரகம் ,கணையம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்க படுகிறது.
 இனி சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக் கொல்லியின் மகத்துவம் பற்றிப் பார்ப்போம். இந்த இலையினை வாயில் இட்டு மெல்லும் போது இது இனிப்புச் சுவையை நாம் அறிய விடாமல் செய்கிறது. இதுவே இதன், பயன்பாட்டிற்குத் தொடக்கமாக இருந்திருக்கக் கூடும். மதுமேகம் மட்டுமல்லாது, கரப்பான், மலக்கட்டு, வயிற்றில் ஏற்படும் நோய்கள், உடலில் இருந்து நீர் சரியாக வெளியேறாது இருத்தல் மற்றும் ஈரல் நோய்களிலும் இதன் பயன்பாடும் இருந்துவந்துள்ளது. ஆனாலும்   இந்திய மருத்துவ முறைகளில் முக்கியமாக இது மதுமேகத்திற்கே பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது.
 சிறுகுறிஞ்சான் தென்இந்தியாவில் அதிகமாக வளர்க்கப்பட்டு மூலிகை ஏற்றுமதியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. சர்க்கரை நோய்  ஆங்கில மருத்துவத்தில் இருபிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை
1. இன்சுலின் எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
2. இன்சுலின் தேவையற்றது..
இதில் சிறு குறிஞ்சானின் பயன் இரண்டாவது வகையிலேயே அதிகமாக உள்ளது.
சிறுகுறிஞ்சானின் மருத்துவப் பயன்பாடு நவீன மருத்துவ முறையில் 1930களில் இருந்து உணரப்பட்டு வந்துள்ளது. இந்த  இலை இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. நமது உடலிலுள்ள கணையத்திலிருக்கும் பிசெல் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இதில் ஏற்படும் குறைபாடே இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது. இந்த செல்களின் எண்ணிக்கையை சிறுகுறிஞ்சான் அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இது தவிர கொலஸ்டிரால் மற்றும் டிரைகிளிசரைடின் அளவையும் குறைக்கிறது. இந்த செயல்கள் அனைத்திற்கும் சிறுகுறிஞ்சானில் இருக்கும் ஜிம்னிக் அமிலமே காரணியாகும். இதுதவிர சிறுகுறிஞ்சான் குடலுறிஞ்சிகளில் இருந்து குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது.
இது  ஒரு கொடி வகையை சார்ந்த மூலிகையாகும்...இதனை எளிய முறையில் வீட்டில் தொட்டியில் வைத்தோ அல்லது வீட்டின் அருகில் உள்ள சிறிய இடத்திலோ
எளிதாக  வளர்க்க முடியும்.போலி மருத்துவர்களையும்,போலி மருந்துகளையும் நம்பாமல் நாமே இது போன்ற நோய் தீர்க்கும் சிறு சிறு மூலிகை செடிகளை நட்டு பயன் பெறலாம்.
சிறுகுறிஞ்சான் மற்றும் அனைத்து வகையான  மூலிகை நாற்றுகளையும்,மற்ற  மூலிகை பொருள்களும்  பெற விரும்பினால் பின் வரும் எண்ணை தொடர்பு கொள்ளவும்;
இன்சுலின் செடியும் கிடைக்கும்.

தொடர்புக்கு :


maruthuvan.tamil@gmail.com

Tuesday, November 15, 2011

மூலிகை பொருள்கள் வாங்க

இனிய தோழர்களே!!

உங்களுக்கு தேவையான அனைத்து வகையான  மூலிகைகளும்,சூரணங்கள் அனைத்தும் மிகவும்  தரமாகவும் ,கலப்படம் எதுவும் இல்லாமலும் குறைந்த விலையிலும் கிடைக்கும். கிடைக்கும் பொருள்களின்  விவரம் பின்வருமாறு

1 . அனைத்து வகையான மூலிகைகளும் (export quality )
2 .அரப்பு
3 . Aloe  Vera  (செடி வளர்க்க)
4 .வெட்டி வேர்

இலவச மருத்துவ ஆலோசனை பெறவும் ,முலிகைகளை பெறவும்.பின்வரும் மின்னஞ்சல்  முகவரியை தொடர்பு கொள்ளவும்

maruthuvan.tamil@gmail.com

ஓரிதழ் தாமரை!!!



தாதுவையுண்டாக்குந் தனிமேகத்தைத் தொலைக்கும் 
                       ஆதரவா மேனிக் கழகு தருஞ் -சீதம்போம் 
                       சீரிதழ்த் தாமரைவாழ் செய்ய மடவனமே ?
                       ஓரிதழ்த் தாமரையை யுண். 





              மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மனித இனத்தை எப்படி பாதுகாக்கிறது என்பதை கண்டறிந்து சொன்னார்கள்.

பொதுவாக மனிதர்களைத் தாக்கும் 4448 நோய்களை அறிந்து அவற்றை மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தும் முறைகளையும் கூறினார்கள். மேலும் நோய்கள் வரும் முன் காக்க இந்த மூலிகைகளின் பயன்களையும் கண்டறிந்தனர். உணவின் மூலம் நோய்கள் தாக்காமல் இருக்கவும் வழி வகை செய்தனர். இதனால் நம் முன்னோர்கள் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்றோ குழந்தைப் பருவத்திலிருந்தே இனம்புரியாத பல்வேறு நோய்களின் பிடியில் மனித இனம் சிக்கித் தவிக்கின்றது.

இடைப்பட்ட காலத்தில் மூலிகைகள் மீது நாம் காட்டிவந்த அலட்சியமே இதற்குக் காரணம்.

நம் அருகே பரவிக்கிடக்கும் மூலிகைகளை களை என்று எண்ணி அழித்த நாம் இன்று அவற்றின் பயன்களை உணர்ந்து தேடும்போது அவை நம் கண்ணில் அகப்படுவதில்லை. இத்தகைய மூலிகைகளின் பயன்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் இம்மாத மூலிகை பகுதியில் பல்வேறு மூலிகைகளின் பயன்களை அறிந்து வருகிறோம்.

இந்த இதழில் ஓரிதழ் தாமரையின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

தாமரை என்றவுடன் நீரில் இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். இது நிலத்தில் வளரும் சிறு செடி வகையாகும். இதன் இலையை வாயில் வைத்து சுவைத்தால் வாயில் குழகுழப்பு தட்டும்.

Sanskrit : Charati

Tamil : Oridhazh thamarai

English : Hybanthus

Telugu : Nilakobari

Malayalam : Orilai thamarai

Hindi : Ratna purush

Bot. Name : Hybanthus enneaspermus

இதன் இலை, தண்டு, பூ, வேர், காய் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டது.

இதற்கு இரத்தின புருஷ் என்ற பெயரும் உண்டு.

தாதுவையுண்டாக்குந்தனிமேகத்தைத் தொலைக்கும்

ஆதரவா மேனிக் கழகுதருஞ் - சீதம்போம்

சீரிதழ்த் தாமரைவாழ் செய்ய மடவனமே?

ஓரிதழ்த் தாமரையை யுண்

- அகத்தியர் குணபாடம்

உடல் வலுப்பெற

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கேற்ப நல்ல ஆரோக்கியமான உடல் அமைந்தால்தான் நாம் பிறந்ததின்பலனை அனுபவிக்க முடியும்.

சிலர் உடல் நலம் பேணாமல் இரவு பகல் பாராமல் பொருள் தேடி அலைகின்றனர். அதிக தூக்கமின்மை, நேரத்திற்கு சரியாக உணவு அருந்தாமை போன்ற காரணங்களால் பலரின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. மேலும் சில தீய பழக்கங்கள் குடிகொண்டு உடல் என்னும் கோவிலை நாசப்படுத்திவிடுகின்றன.

இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடுபட ஓரிதழ் தாமரை மிகவும் பயனுள்ள மருந்தாகும். ஓரிதழ் தாமரையின் சமூலத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து காலை, மாலை என இருவேளையும் அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு உடல் தேற ஒரிதழ் தாமரையின் சமூலம் நல்ல மருந்தாகும்.

புண்டரிக நன்மை பொருந்தவென்றா லேடேகல

புண்டரிக நன்மை புனைதீநீ-புண்டரீக

நாலுதிர மூக்கு நலிக்கு

மேகவெட்டை நீங்க

மேகவெட்டை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஓரிதழ் தாமரை சமூலம், பச்சை கற்பூரம், கோரோசனை இவற்றை சம அளவு எடுத்து இடித்து பசுவின் நெய்யுடன் கலந்து மேகவெட்டை தாக்கிய பகுதிகளில் பூசி வந்தால் மேகவெட்டை தீரும் .

உடலில் உள்ள புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.

சுரத்தை கடித்து சுவாசத்தைப் போக்கி

யுரத்தை யுடலுக் குதவும் - பருத்தவுடல்

வாடாதனுதினமும் வைத்தடிக்கு மேகத்தை

யேடேக கோகனகமே

- தேரர் வெண்பா

சுரக்காய்ச்சலால் அவதியுறுபவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை கசாயம் செய்து அருந்தி வந்தால் சுரக்காய்ச்சல் நீங்கும். இரைப்பு நோய்க்கு இது அருமருந்தாகும்.

உடல் எடை குறைய ஓரிதழ்தாமரை கசாயம் சிறந்தது.

தாது நஷ்டத்தைப் போக்க

இளம் வயது ஆண்பிள்ளைகளுக்கு பருவ வயது வளர்ச்சியின் போது சில பாதிப்புகளால் இரவில் தூங்கும்போது விந்து வெளியேறும். இதனால் தாது நஷ்டப்பட்டு உடல் தேறாமல் நோஞ்சான் போல் காணப்படுவர். இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை இடித்து தேன் அல்லது பாலில் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் இழந்த தாதுவை மீட்கலாம்.

ஆண்கள் சிலருக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகளால் உடல் உறவில் நாட்டம் இன்றி இருப்பார்கள். இவர்கள் போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாந்துவிடுகின்றனர். சிலர் இதனை மறைத்துவைத்து மனவேதனைக்கு ஆளாகி விடுகின்றனர்.

இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை (இலை, தண்டு, வேர், பூ, காய்) நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்த வேண்டும். இவ்வாறு ஒருமண்டலம் தொடர்ந்து செய்துவந்தால் மேற்கண்ட பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடலாம்.

இதனை காயகல்பமாகச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.

Thursday, November 3, 2011

விந்து நாதம்

விந்து என்றவுடன் ஏதோ கெட்ட வார்த்தை, ஏதோ பேச தகாத  வார்த்தை என்றும்  நம் மூட மக்கள் எண்ணி கொள்கிறார்கள். நாதம் என்றால் பலருக்கு என்னவென்றே தெரியாது,ஏதோ வாத்திய கருவி என்று நினைத்து கொள்கிறார்கள்.சரி உண்மையில்  விந்து என்றால் என்ன? உடலுறவின்போது  வெளி வரும் வெள்ளை திரவம் அவ்வளவுதானா?  அதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு? அதனால் உடலுக்கு என்ன நன்மை/தீமை?அதிகமாக விந்தை இழந்தால் உடலுக்கு என்ன தீங்கு?அதிகமாக விந்தை இழந்தால் உடலுறவு கொள்ளமுடியாதா அல்லது ஆண் குறி சுருங்கிவிடுமா?
இப்படி பலவிதமான  கேள்விகள் ,சந்தேகங்கள் நமக்குள்   இருந்தாலும் அதை வெளிபடையாக பேசி  தீர்த்து  கொள்ளவும் அறிவை வளர்த்து கொள்ளவும்  ஆரோக்கியமான சுழலை நமது சமுதாயம் அளிக்கவில்லை. இதை பயன்படுத்திகொண்டுதான்  லாட்ஜ்  டாக்டர்களும் ,பரம்பரை சித்த  வைத்திய கேடிகளும் நமது மக்களின்  மண்டையை குழப்பி  பணம் சம்பாரித்து கொண்டு இருக்கிறார்கள்.சரி விஷயத்துக்கு வருவோம்.விந்து என்றால் என்ன?விந்து என்றால் உயிர்.விந்து சக்தி என்றால் உயிர் சக்தி.உதாரணமாக ஒரு பல்பு  எரிய ஒருவகையான சக்தி தேவை அதை நாம் மின்  சக்தி என்கிறோம்.. தண்ணிரை கொதிக்க வைக்க வெப்ப சக்தி தேவை.இது போல இந்த உலகில் ஒவ்வொரு செயலை செய்யவும்,எந்த ஒரு பொருள் அசைக்கவும் ஒரு வகையான சக்தி தேவை. அது போல நமது இந்த உடல் எந்திரத்தை இயக்கவும் ஒரு சக்தி தேவைபடுகிறது.அந்த உயிர் சக்தியை கொடுப்பது தான் இந்த விந்துவின் வேலை.சுக்கிலம் என்று சொல்லகூடிய  இந்த விந்துவானது,நாம் உண்ணும் உணவின் ஒரு பகுதியில் இருந்து உண்டாக்கபடும்,பிறகு   இந்த சக்தியானது உயிர் அணுக்கள் சேர்க்க பட்டு விந்துவாக உடலில் சேமிக்க படுகிறது. இந்த விந்து சக்தியின் முக்கிய வேலை உடலில் உள்ள அனைத்து செல்களையும் புதுப்பித்தல் மற்றும் சேதாரமடைந்த செல்களை சரி செய்வதாகும். புதுப்பித்தல் முடிந்ததும் தேவைக்கு அதிகமாக சேமிக்கப்படும்  விந்துவானது,விந்து பை நிரம்பியவுடன்  தன்னிச்சையாகவோ  அல்லது காம கனவுகளுடனோ  வெளியேறி விடும்.ஒருவன் அதிகமான விந்தை செலவழிக்கும் போது அவனது சேதாரமான   செல்களை சரி செய்யவும் புதுப்பிக்கவும் வழி இல்லாமல் அந்த உடல் தளர்வடைந்து சீர்கெடுகிறது.

செல்களை புதுப்பித்தல் என்பது பின்வருவனவற்றை உள்ளடக்கியது.
1  சதை வளர்ச்சி
2  எலும்பு வளர்ச்சி
3  ரோம வளர்ச்சி
4  அறிவு வளர்ச்சி
5  தோல் பொலிவு
6  உயிரணு உற்பத்தி
7  உடலுறுப்புகள் பேணுதல்

ஒருவன் தேவைக்கு அதிகமான விந்தை செலவழிக்கும் போது, மேல் சொன்ன வளர்ச்சிகள்  தடை படுகிறது,அங்கு உடல் நலம் கெடுகிறது.இன்றும்  கிராமங்களில் ஆட்டு கிடாய்களுக்கு  ஒடை தட்டும் வழக்கம் உள்ளது.ஏன் என்று கேட்டு பாருங்கள் அவர்கள் சொல்லுவார்கள் ஒடை தட்டினால்  சதை நன்றாக வளரும் கொழுப்பு நிரம்ப இருக்கும் என்று.இதை நாம் விந்துவின் முக்கியதுவத்துக்கு சான்றாக எடுத்துகொள்ளலாம்.அதிகமான விந்தை இழக்கும்போது  அந்த உடல் நலிந்து தளர்ந்து  சீர்கெட்டுபோகிறது,அத்துடன்  உடல் இளைப்பு, பசி இன்மை ,மன குழப்பம் , துக்கம் இன்மை போன்றவைகளும் சேர்ந்துகொள்கிறது.

சுக்கிலத்தின் மகிமைகளை  பின்வரும் சித்தர்களின்  பாடல்களின் மூலம் அறியலாம்.

விந்தை விட்டவன் நொந்து கெட்டான்  - திருமுலர்
சுக்கிலம் விட ,சுவர் கெடும்  -திருமுலர்
இந்தரியம் தீர்ந்துவிட்டால் சுந்தரியும் பேய் போல  - ****

சரி விந்து இழப்புக்கும் உடலுறவு கொள்ள முடியாமல் போவதுக்கும்  என்ன தொடர்பு?அதிகமான விந்தை இழந்துவிட்ட ஒருவனது செயல்பாடுகள் அனைத்து செயல்களிலும் நிறைவனதகாவே இருக்காது.அது போல தான் உடலுறவிலும்.உடல் சக்திஇன்மை தான் காரணம் அனைத்துக்கும் வேறு ஒன்றும் இல்லை.ஆனால்  ஊடகங்களும்  போலி மருத்துவர்களும் இதை ஊதி  பெரிதாக்கி விட்டார்கள். எனவே  விந்தை விணடிக்காமல்,உடலுறவு என்பது ஏதோ கழிவை கழித்தல் போல வைத்து கொண்டால் உடல் நன்றாக இருக்கும்,அதை விடுத்தது,ஏதோ இன்பம் கிடைகிறது என்று அதை நோண்டி கொண்டே இருந்தால்  உடல் பலம் கெட்டு , உடல் நோய்களின் இருப்பிடம் ஆகிவிடும்.

பின்வரும் ஆங்கில மருத்துவர்களின் கருத்தை பாருங்கள் .

1  விந்து என்பது எச்சில் போன்ற ஒன்று, அதை இழப்பதால் ஒன்றும் கெடுதல் இல்லை.
2  இறைக்கிற கிணறு தான் நன்றாக ஊறும்

இதை ஒருவன் பின்பற்றினால் அவன் வாழ்க்கை சிக்கி சின்னபின்னமாவது திண்ணம்.

ஐயோ  ! விந்து இவ்வளவு முக்கியமானதா  இது தெரியாமல் கண்டபடி விரயம் செய்து  விட்டோமே என்று புலம்பி  தவித்துலாட்ஜ்  டாக்டர்களிடம்  ஓட வேண்டாம்.

முறையான சத்தான உணவுகளும்,உடற்பயிற்சிகளும் ,நல்ல மருந்துகளும்  உட்கொண்டு சீர் கெட்ட உடலை சீர் செய்யலாம். அதிக விந்தை இழந்து  உடல், முக பொலிவை இழந்து விட்டோம் என  வருந்தும் தோழர்களே, பின்வரும் உணவு முறைகளை பின்பற்றுங்கள், 3  மாதங்களில் சேர்ந்த மாற்றங்களை காணலாம்.

உணவு முறை
-------------------------
காலை எழுந்தவுடன்  வெறும் வயிற்றில் ஒரு டம்ளர்  தண்ணீர்  அருந்தவும் பிறகு 10  உலர் திரட்சைகள்,5  முந்திரி, 5  பாதாம் ,5  பிஸ்தா , 1  அத்தி பழம்(பிக்),1 உலர் பேரிச்சை என்று 3  மாதங்கள்  உண்ணுங்கள் உடல் மற்றும் உயிர் சக்தி பெருகும்.நல்ல காய்கறிகள்,பருப்பு வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
உடல் சூடு என்பது சக்தியை போக்கும் காரணி எனவே சூடு தரும் பொருள்களை தவிர்த்து விடுங்கள்.உடல் சூடு அதிகரித்தல் விந்து பையை விட்டு வெளியேறி விடும் .

உடல் இழந்த சக்தியை பெற பின்வரும் முலிகை பொடிகளை  பாலுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.

1  ஓரிதழ் தாமரை
2  ஜாதிகாய்  சூரணம்
3  அஸ்வாகாந்த சூரணம்

100  சதவிதம் உயிர்சக்தி (ஆண்மை  குறைவு) மருந்துகள் மேல் சொன்ன மூலிகைகளில் இருந்து தான் தயாரிக்கபடுகிறது ,எனவே கண்ட மருந்துகளை வாங்கி தின்னாமல் ,மேல் சொன்ன முலிகை பொடிகளை நல்ல ஆயுர்வேத அல்லது சித்த மருந்து  கடைகளில் வங்கி உண்டு பலன் பெறுங்கள்.

அனைத்து விதமான மூலிகைகளும் கலப்படமில்லாமல் தரமானதாகவும் வாங்க இந்த லிங்கில் சென்று பார்க்கவும்..

http://shop.india.vethathiri.edu.in/login.aspx